சல்மான் கானுக்கு பதில் அளித்த நடிகர் யஷ்

இந்திய சினிமாவில் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் மாற்றம் நிகழ்ந்து இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது . தமிழ் படங்களுக்கு மற்ற மொழி மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அதே போல் மற்ற மொழி படங்களும் தமிழில் நல்ல வரவேற்பை பெறுகிறது . குறிப்பாக பேன் இந்திய அளவில் வெளியாகும் பாகுபலி , புஷ்பா போன்ற படங்கள் வசூல்ரீதியகா மிகப்பெரிய வெற்றியை இந்திய அளவில் பெற்றன .இதனால் தென்னிந்திய நடிகர்களின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது .

ஆனால் பாலிவுட் நடிகர்களின் படங்கள் தென் இந்தியாவில் பெரிய வெற்றிகளை குவிப்பதில்லை . சமீபத்தில் இதைப்பற்றி நடிகர் சல்மான் பேசி உள்ளார் . “தென்னிந்தியப் படங்கள் இங்கு ஹிட்டாகின்றன, இந்திப் படங்கள் அங்கு ஓடுவதில்லை” எனத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படையாக கூறி இருந்தார் . இதற்கு நடிகர் யஷ் சல்மானுக்கு பதில் கூறி இருக்கிறார் .

“இதனை இப்படி பார்க்க வேண்டியதில்லை. தங்களது படங்களும் தகுந்த வரவேற்பைப் பெறுவதில்லை. என்ன நடக்கிறதென்றால் இங்கு டப் செய்ய தொடங்கிவிடுகிறார்கள், நாங்கள் என்ன உருவாக்குகிறோமோ அதற்கு மக்கள் பழகிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் டப் படங்களை ஜோக்காக நினைத்து கொள்கிறார்கள். அந்த நிலைமை டப்பிங்கினால் தான் உருவாகிறது. முக்கிய இடம் கிடைப்பதில்லை. எங்களுடைய கதை சொல்லும் முறைக்கும் படத்திற்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது என்றால் அது ஓரிரவில் நடந்துவிடுவதில்லை. அவர்களுக்கு எங்களது பாணி கன்டென்ட்கள் சென்று சேர்வதற்கு சில வருடங்கள் எடுக்கும். பாகுபலி படம் எங்களுக்கு முன்னோடியாக அந்த இடத்தை உருவாக்கி வைத்திருந்தது. அதன் பிறகு KGF உருவாக்கியது.”

மேலும், “நாங்கள் நிறைய ஹிந்தி படங்கள் பார்க்கிறோம். ஹிந்தி நட்சத்திரங்களை ரசிக்கிறோம். ஆனால் மார்க்கெட் ரீதியாக சல்மான் சார் சொல்வது சரியே. இன்னும் அதிகரிக்க வேண்டும். படம் வெளியாவதில் உள்ள மற்ற கோணங்களையும் பார்க்க வேண்டும். நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு வர வேண்டும், நல்ல பொழுதுபோக்கு படங்கள் வெளியாக இங்கிருக்கும் மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். அது கூடிய விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று பதில் அளித்திருக்கிறார்.

Share.