உடம்பை குறைக்காத நடிகர் !

2012-ஆம் ஆண்டு வெளியான படம் அட்டகத்தி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் . அட்டகத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார் . அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கினார் ரஞ்சித் . ஆனால் அந்த இரண்டு படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .

காலா படத்திற்கு பிறகு ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை . இதில் நடிகர் ஆர்யா கதநாயகனாக நடித்து இருந்தார் . இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் ஓ.டி.டியில் வெளியாகி இருந்தது . கலையரசன் , சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள் பாக்ஸிங்கை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது .ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ப.ரஞ்சித் அடுத்து இயக்கி முடித்துள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது . இந்த படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகர்கள் . ஒரு கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் . இன்னொரு கதாநாயகனாக நடிக்க முதலில் அட்டகத்தி தினேஷை நடிக்க வைக்கலாம் என்று பா.ரஞ்சித் இருந்துள்ளார் ஆனால் அவர் உடல் எடை அதிகமாக இருந்துள்ளது எனவே 10 நாட்களுக்குள் உடல் எடையை குறைத்துவிட்டு வர சொல்லி இருக்கிறார் ரஞ்சித் . அட்டகத்தி தினேஷால் உடல் எடையை குறைக்கு முடியவில்லை எனவே நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு இரண்டாவது நாயகனாக நடிகர் கலையரசனை போட்டுள்ளார் .

Share.