மும்பை சென்ற சூர்யா! என்ன காரணம் தெரியுமா ?

நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார் . இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் நடிகர் சூர்யா மும்பை சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது .

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் சஜித் நாடியா டிவாலாவின் அலுவலகத்தில் சூர்யா மகிழுந்தில் வந்து இறங்கும் காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது . இதனை பார்த்த பலரும் சூர்யா பாலிவுட் படத்தில் நடிக்க போகிறாரா என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர் .

இந்நிலையில் நடிகர் சூர்யா மும்பை சென்றதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாக இருக்கிறது . கடந்த 2020-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த படம் சூரரைப் போற்றுஇந்த படம் ஓ.டி.டியில் வெளியானது . உலக ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றது .
இதனை தொடர்ந்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியானது . இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் பாலிவுட் தயாரிப்பாளர் சுஜித் அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர் .அந்த படத்தின் பூஜைக்காக மும்பை சென்று இருக்கிறார் சூர்யா.

சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.