டான் படத்தை ரசிகர்கள் கொண்டாட யார் காரணம் ?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டான் .இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் .பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் . எஸ்.ஜே .சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருந்தது.

இந்நிலையில் படம் திரை அரங்கில் மே 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான முதல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர் . பொதுவான ரசிகர்களும் , சினிமா ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி வெற்றி பெற செய்தனர் .

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றது . இதனை தொடர்ந்து டான் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர் . இந்நிலையில் டான் படம் இன்றுடன் வெளியாகி 50-வது நாளை நிறைவு செய்துள்ளது . இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் . இந்த வருடம் வெற்றி பட்ட படங்களான ஆர்.ஆர்.ஆர் , கே.ஜி.எஃப் 2, விக்ரம் என அனைத்து படங்களும் ஆக்ஷன் படங்கள் ஆனால் டான் ஒரு நகைச்சுவை மற்றும் எமோஷனல் படம் . ஆக்ஷன் படங்களை கொண்டாடிய அதே ரசிகர்கள் முன்னதாக வெளியான வலிமை படத்தின் அம்மா சென்டிமென்டுகளை கலாய்த்து தள்ளிய அதே ரசிகர்கள் டான் படத்தை வெற்றி பெற செய்துள்ளனர் இதற்கு முக்கியமான காரணம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்று தான் சொல்ல வேண்டும் .

ரசிகர்களை அழ வைப்பது எளிதான ஒரு காரியம் அல்ல தனது சிறந்த இயக்கத்தினால் ரசிகர்களை கண்ணீர் விட செய்துவிட்டு திரையரங்கில் தானும் ஆனந்த கண்ணீர் விட்டு சென்ற இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

Share.