அட்லீயை நிராகரித்த முன்னணி நடிகர் !

ராஜா ராணி , தெறி ,மெர்சல் , பிகில் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ . இவரது படங்கள் பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் நல்ல வசூலை இவரது படங்கள் பெறுகின்றன. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பிகில். இந்த படம் நல்ல வசூலை பெற்றாலும் ரசிகர்களிடம் மோசமான விமர்சனத்தை பெற்றது .

இதனை அடுத்து இயக்குனர் அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார் . அதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வருகிறார் . நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார் . சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே இருக்கிறது .

இந்நிலையில் நடிகர் அட்லீ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது . அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் புஷ்பா . இந்த படம் பேன் இந்திய படமாக வெளியானது . வெளியான பிறகு நல்ல வெற்றியையும் இந்த படம் பெற்றது . இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் அடுத்த படங்களில் கதை கேட்க தொடங்கி உள்ளார் . இந்நிலையில் அட்லீ அல்லு அர்ஜுனிடம் சம்பளமாக 35 கோடி கேட்டுள்ளார் . இதனால் அல்லு அர்ஜுன் 35 கோடி சம்பளமாக தர முடியாது என்று கூறியுள்ளார் . இதனால் அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் தற்போதைக்கு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Share.