புதுப்பேட்டை படத்தை நிராகரித்த முன்னணி இசையமைப்பாளர் !

2006-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் புதுப்பேட்டை. நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தின் நடிகை சினேகா , சோனியா அகர்வால் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து இருந்தார் . கோலா பாஸ்கர் படத்தொகுப்பு செய்து இருந்தார் .லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் வசனங்களை எழுதி இருந்தார் .

புதுப்பேட்டை படத்தில் முதலில் நடிக்க தயங்கிய தனுஷ் பின் எழுத்தாளர் பாலகுமாரன் கொடுத்து நம்பிக்கையில் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் . நடிகர் தனுஷின் திரை பயணத்தில் இந்த படம் மிக முக்கிய படமாக உள்ளது . இந்த படம் திரைக்கு வந்தபொழுது பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும் அதன் கல்ட் கிளாசிக் படமாக மாறியுள்ளது .

இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக இருப்பது படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இயக்குனர் செல்வா புதுப்பேட்டை படத்திற்கு முதலில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களை இந்த படத்திற்கு இசையமைக்க பேசி உள்ளார் ஆனால் படத்தின் கதையை கேட்டுவிட்டு ஹாரிஸ் இது எனது ஜானர் படம் இல்லை என்று கூறி மறுத்து விட்டார் . அதன் பிறகு தான் புதுப்பேட்டை படத்திற்கு யுவனை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் செல்வா .

Share.