நடிகை பிரிகிடா அளித்த விளக்கம் !

1989வது ஆண்டு வெளியான புதிய பாதை என்கிற படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன் . இவருக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் என்ற பெயருடன் கோலிவுட்டில் வளம் வருகிறார் . இவர் தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை செய்து வருகிறார் . அந்த வகையில் தற்பொழுது இவர் இயக்கி இருக்கும் படம் இரவின் நிழல் . இந்த படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது . மேலும் எடிட்டர் இல்லாமலே இந்த படம் தயாராகி உள்ளது . இயக்குனர் A.R.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் திரைக்கு வந்துள்ளது . படத்தை பார்த்த பலரும் படத்திற்கு நல்ல வரவேற்பை தந்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரிகிடா நடித்து இருக்கிறார் . பிரிகிடா இந்த படத்தில் ஒரு காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடித்து இருக்கிறார் .

இது பற்றி அவரிடம் கேட்டபொழுது இந்த காட்சி பற்றி தந்து பெற்றோர்களிடம் சொல்ல முதலில் நெருடலாக இருந்தது பின்பு அந்த காட்சியின் புனிதம் பற்றி விளக்கினேன் என்று கூறினார் மேலும் ரசிகர்களுக்கு அது கவர்ச்சியாக தெரியாது புனிதமாக தான் தெரியும் என்று தெரிவித்து இருக்கிறார் .

Share.