நந்தா படத்தில் சிவாஜி மறுத்தது ஏன் தெரியுமா ?

2001-ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான படம் நந்தா . இந்த படம் நடிகர் சூர்யா அவர்களின் திரை வாழ்க்கையை மாற்றிய ஒரு படம் என்று கூட சொல்லலாம் . நீண்ட வருடமாக கோலிவுட்டில் வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்த நடிகர் சூர்யா அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியை தேடி கொடுத்த படம் நந்தா . இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார் . படத்தில் இருந்த அணைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது .

நந்தா படத்தில் நடிகை லைலா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் . கருணாஸ் இந்த படத்தில் காமெடி நடிகனாக அறிமுகம் ஆனார் . அவரின் லொடுக்கு பாண்டி காதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிக்கும்படியாக உள்ளது . மேலும் நடிகர் சூர்யாவின் தாயாக நடித்த நடிகை ராஜஸ்ரீ நடித்து இருந்தார் , இவரது நடிப்பும் மிக சிறப்பாக இருந்தது .

இந்நிலையில் நந்தா படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகர் ராஜ்கிரண் . அந்த கதாபாத்திரத்தின் பெயர் பெரியவர் . இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை நடிக்க வைக்க முயற்சி செய்தார் இயக்குனர் பாலா . ஆனால் அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சிவாஜி கணேசன் அதில் நடிக்க மறுத்து விட்டார் . இதன் பிறகு தான் ராஜ்கிரண் அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . அந்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பையும் பெற்றது .

Share.