வெளியாகுமா ஜி.வி.பிரகாஷ் படம் ?

கடந்த 2006ஆம் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் வெயில் . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் ஜி.வி.பிரகாஷ் . இது தான் இவரது முதல் படம் . இந்த பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . பல நல்ல நல்ல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார் . 2014ஆம் ஆண்டு வரை இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் 2015ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார் அதில் சில படங்கள் ஏதோ சில காரணங்களால் திறைகூவறாமலே இருக்கின்றன .

அந்த வகையில் 2018ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த திரைப்படம் ‘ஐங்கரன்’ . இந்த படத்தை ‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். மகிமா நம்பியார் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது . இந்நிலையில் இந்த படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருந்தது ஆனால் இந்த படம் வெளியாகவில்லை .இந்நிலையில் இப்படம் வருகின்ற மே 5-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Share.