நயன்தாராவிற்கு போன் செய்த சல்மான் கான் ! என்ன காரணம் தெரியுமா ?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நானும் ரவுடி தான் . இந்த படம் உருவாகி கொண்டு இருந்த பொழுதே விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராக்கும் காதல் ஏற்பட்டது . இந்த படத்திற்கு பிறகு இவர்களது கூட்டணியில் நீண்ட நாட்களாக படம் வரவில்லை . இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார் .

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது .ஆனால் இவர்கள் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்களுக்கு அறிவிக்கவில்லை .

ஆனால் தற்போது விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது .

நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு நடிகர் சல்மான் சமீபத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது . நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு பிறகு சல்மான்கானுடன் இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . எனவே நயன்தாரா அடுத்த கட்ட சினிமா வாழ்க்கையில் பாலிவுட்டில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share.