மீண்டும் வரும் ஸ்ருதி ஹாசன் !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன் . பிறகு ஹிந்தி படங்களிலும் ஆதிக்கம் செலுத்தினர் . சூர்யா , தனுஷ் போன்ற சிறந்து நடிகர்களுடன் தனது ஆரம்பகால திரை பயணத்தில் நடித்து இருந்தார் . மேலும் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் இவர் பாடி உள்ளார்.இவரது குரலுக்கு பல ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் .

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகரான நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் சமீப காலமாக எந்த மொழி படங்களிலும் நடிக்காமல் தவிர்த்து வந்தார் . இவர் கைவசம் தற்போது சலார் படம் உள்ளது . இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார் . பிரபாஸ் இந்த படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் . இந்த படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது .

இந்நிலையில் நடிகை ஸ்ருதி நடிக்கும் ஒரு புதிய படத்தின் தகவல் வெளியாகி இருக்கிறது . யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு மிகுந்த முக்கியத்துவமுள்ள கதாபாத்திரமாம். இந்த படம் ஓ.டி.டி -யில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது . நீண்ட வருடங்கள் கழித்து ஸ்ருதிஹாசன் படம் வருவதால் ஸ்ருதி ஹாசனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Share.