லெஜெண்ட் சரவணனுடன் நடிப்பாரா தமன்னா ?

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தனது சொந்த ஷாப்பிங் ஸ்டோர் விளம்பரத்திற்காக பிரபல நடிகைகள் ஹன்சிகா மோத்வானி மற்றும் தமன்னாவுடன் நடித்து பிரபலமடைந்தார். சரவணா ஸ்டோர்ஸின் விளம்பர வீடியோக்களில் பிரபல நடிகைகளுடன் நடித்ததற்காக ஆன்லைனில் இவர் ட்ரோல் செய்யப்பட்டார் . ஆனால் அது அவரையும் அவரது கடையையும் பிரபலமாக்கியது.

இந்நிலையில் சரவணன் லெஜெண்ட் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமிபத்தில் நடந்தது. இதில் தமன்னா ,ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட நட்சத்திர நடிகைகள் கல்ந்துக்கொண்டனர்.

நடிகை தமன்னாவிடம் லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டது .அதற்கு படத்தின் கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்து இருந்தால் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா .

Share.