பேரரசுவுடன் இணைவாரா விஜய் ?

தமிழ் சினிமாவில் திருப்பாச்சி படத்தை இயக்கி அதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் பேரரசு . இவர் தனது முதல் படத்திலேயே நடிகர் விஜய்யை வைத்து இயக்கி மாபெரும் வெற்றியையும் தந்தார் . இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் சிவகாசி என்ற படத்தை எடுத்தார் .இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது . நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் இந்த இரண்டு மிக முக்கியமான படங்களாக அமைந்தன .

இந்த இரண்டு படங்களும் 2005-ஆம் ஆண்டு வெளியானது . இந்த படங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யிடம் பேரரசு
கதை சொல்லவில்லை . இந்நிலையில் பேரரசு சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் இதை பற்றி பேசி உள்ளார். அந்த பேட்டியில் நடிகர் விஜய்க்கு மூன்று கதை தயார் செய்து இருக்கிறேன் என்றும் நான் அவரிடம் எப்பொழுதும் உங்களுக்கு படம் பண்ண தயார் என்று சொல்லிவிட்டேன் என்றும் அவர் தான் எனக்கு ஓ.கே சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் விஜய்யின் மார்க்கெட் உயர்ந்துவிட்டது , பட்ஜெட் உயர்ந்துவிட்டது எனக்கு அந்த அளவிற்கு திறமை இருக்கா என்ற சந்தேகம் அவருக்கு இருக்கலாம் இதை எல்லாம் மீறி என் மீது நம்பிக்கை வைத்து வந்தால் வெற்றி படம் கொடுப்பான் என்று தெரிவித்துள்ளார் .

Share.