விஜய்க்காக காத்திருக்கும் இயக்குனர் !

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3. இந்த படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , , திவ்யதர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதுவரை இந்த படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை . சமீபத்தில் இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி என்கிற படம் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் பற்றி பேசி உள்ளார் இயக்குனர் சுந்தர் .சி .
நடிகர் விஜய்க்கு அப்போதிருந்த காலத்திலேயே தான் கதையை எழுதி இருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக விஜய்யுடன் கைகோர்க்கும் முடியாமல் இருந்தது.
ஆனால் தற்போது விஜய்க்காக ஒரு கதையை எழுதி உள்ளேன் இந்த கதையை கேட்டு விஜய் சம்மதம் தெரிவித்தால், கண்டிப்பாக அவருடன் சேர்ந்து படம் இயக்குவேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் முக்கிய நான்கு முன்னணி நடிகர்களுடன் படம் இயக்கி விட்டேன் என்ற திருப்தியோடு நான் இருப்பேன் என்றும் சுந்தர்.சி அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

Share.