நிறைவேறுமா விஜய் சேதுபதியின் ஆசை !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி , ஃபகத் பாசில் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பா .ரஞ்சித்,நடிகர் சிலம்பரசன், நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தை நடிகர் கமலுடன் இணைந்து வெளியிடுகிறார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் லோகேஷ் என்னை அணுகினார். அந்த படத்தின் கதை எனக்கு பிடித்து இருந்தது அதனால் நடித்தேன் . லோகேஷ் , கமல் அவர்களை இயக்குவது குறித்து அறிந்தவுடன் தனுக்கு ஒரு கதாபாத்திரம் இதில் கொடுக்குமாறு கேட்டு இருந்தேன் . ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் என்னை கேட்கவில்லை . பிறகு பல இடங்களுக்கு சென்று விட்டு மீண்டும் என்னிடம் வந்தார் . உனக்கு வேறு வழி இல்லை என்று லோகேஷிடம் சொன்னேன் .அதன் பிறகு தான் இந்த படத்தில் நடித்தேன் என்றார் விஜய் சேதுபதி .

பிறகு நடிகர் கமலை பற்றி பேசிய விஜய் சேதுபதி உங்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது அது நினைவாகிவிட்டது . தற்பொழுது மீண்டும் ஒரு ஆசை இருக்கிறது . உங்களது இயக்கத்தில் , உங்களது வசனங்களை பேசி நடிக்க வேண்டும் என்று கமலிடம் கேட்டார் . விஜய் சேதுபதியின் இந்த ஆசை நிறைவேறுமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

Share.