விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 15 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த மார்ச் 4-ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து கொண்டிருக்கிறார். இதில் மேகா ஆகாஷ், கனிகா, ரித்விகா, மோகன் ராஜா, விவேக் மிக முக்கிய ரோல்களில் நடித்து கொண்டிருக்கிறார்கள். தற்போது, இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘முருகா’ பாடலை டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான சிலம்பரசன் பாடியுள்ள இப்பாடல் விஜய் சேதுபதி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது.

Share.