நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை – யாஷ்

நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே ஜி எஃப் -1. இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு கன்னடம் என வெளியான பல மொழிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது .

இந்த நிலையில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் ட்ரைலர் வெளியானது .படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடுகிறார்கள் படக்குழுவினர் . இந்த படம் பான் இந்திய படமாக உருவாகி உள்ளதால் படத்தினை விளம்பரப்படுத்த வெளியாகும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று படத்தினை பற்றி பேசி வருகிறார் நடிகர் யாஷ் . தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கே ஜி எஃப் 2 படத்திற்கு ஒரு நாள் முன்னதாக விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது . இதனை பற்றி ஏற்கனவே பேசி உள்ளார் யாஷ் . கேஜிஎஃப் 2 , பீஸ்ட் இந்த இரண்டு படத்தையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும் . சினிமா ஒன்றும் அரசியல் இல்லை . ஒன்றுக்கு ஆதரவளித்தல் மற்றொன்றுக்கு ஆதரவு தர கூடாது என்று சினிமாவில் இல்லை என்று கூறி இருந்தார் .

இந்த நிலையில் நடிகர் யாஷ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கேஜிஎப் 2 திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.கன்னட சினிமாவின் தரத்தை மேம்படுத்தும் சினிமாவாக இந்த படம் அமையும் என்று தெரிவித்துள்ளார் . மேலும் கேஜிஎப் திரைப்படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படம் என்றும் கே ஜி எஃப் 2 மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தை பற்றியும் அவர் பேசினார் . நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தோட தன் படம் வெளியாகும் என்று நான் நினைத்து பார்த்தது இல்லை .பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் -2 இரண்டு படமும் மிக பெரிய வெற்றியை பெற வேண்டும் என கூறியுள்ளார் . நடிகர் யாஷின் இந்த ஆசை நிறைவேறுமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

Share.