சூப்பர் ஹிட்டான காமெடி படத்தின் பார்ட் 2-வில் நடிக்கும் யோகி பாபு – கருணாகரன்!

இப்போதெல்லாம் ‘காமெடி’ என்று சொன்னாலே யோகி பாபுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் யோகி பாபு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் யோகி பாபுவின் ஸ்பெஷல். இப்போது, யோகி பாபு நடிப்பில் ‘வலிமை, பீஸ்ட், பன்னி குட்டி, அயலான், டாக்டர், சலூன், பேய் மாமா, கடைசி விவசாயி, அரண்மனை 3, டிக்கிலோனா, பொம்மை நாயகி’ என பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், யோகி பாபு தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் 2002-ஆம் ஆண்டு முரளி – வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் பார்ட் 2-வாம். காமெடி ஜானர் படமான இதில் யோகி பாபுவுடன் இணைந்து கருணாகரனும் நடிக்க உள்ளாராம். மிக விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.