‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் யோகி பாபு… வைரலாகும் ஸ்டில்!

இப்போதெல்லாம் ‘காமெடி’ என்று சொன்னாலே யோகி பாபுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் யோகி பாபு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் யோகி பாபுவின் ஸ்பெஷல். இப்போது, யோகி பாபு நடிப்பில் ‘வலிமை, விஜய் 65 படம், பன்னி குட்டி, அயலான், டாக்டர், சலூன், பேய் மாமா, கடைசி விவசாயி, அரண்மனை 3, டிக்கிலோனா, பொம்மை நாயகி’ என பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது, அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் யோகி பாபு ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Share.