தியேட்டருக்கு நோ… OTT-யில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ எப்போது ரிலீஸ்

சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘மண்டேலா’. இந்த படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்க, மிக முக்கிய ரோல்களில் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ணா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர் யோகி பாபுவின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ட்ரெய்லருக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் தான் ட்ரெய்லரை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இதனால் யோகி பாபுவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆனார்கள். படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல், நேரடியாக விஜய் டிவியில் வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு ஒளிபரப்ப ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, டிவியில் ஒளிபரப்பான அடுத்த நாளே (ஏப்ரல் 5-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.