ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த மாதிரி விஷயத்தை செய்த முன்னணி ஹீரோ… கடுப்பான இளம் இயக்குநர்!

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாரின் மருமகன் தான் அந்த ஹீரோ. இவரது அப்பா, அண்ணன், மனைவி ஆகியோர் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த ஹீரோ நடிப்பில் 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த லிஸ்டில் தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழி படங்களும் உள்ளது.

இதில் ஒரு படத்தை இளம் இயக்குநர் இயக்கி வருகிறார். இவர் இயக்கிய முதல் படம் மெகா ஹிட்டானது. இரண்டாவது படம் ஃபைனான்ஸ் பிரச்சனையால் இன்னும் வெளியாகவே இல்லை. மூன்றாவது படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ஃப்ளாப்பானது. பின், முன்னணி இயக்குநர் ஒருவர் தயாரித்த ஆந்தாலஜி வெப் சீரிஸில் ஒரு குறும்படத்தை இயக்கினார்.

சமீபத்தில், பிரபல OTT தளத்தில் வெளியான இவ்வெப் சீரிஸில் அந்த இளம் இயக்குநர் இயக்கிய குறும்படம் சிலருக்கு பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை, பலருக்கு புரியவும் இல்லை. இந்நிலையில், இந்த இளம் இயக்குநர் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த ஹீரோ இவரை இயக்கவிடாமல், அவரே ஆக்ஷன் கட் சொல்லி வருகிறாராம். இதனால் அந்த இயக்குநர் ஹீரோ மீது கடுப்பில் உள்ளாராம்.

Share.