வைரலாகும் யுவனின் பதிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் யுவன் ஷங்கர் ராஜா . இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் இரண்டாவது மகனான யுவன் 1997-ஆம் வெளியான அரவிந்தன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்ப கால கட்டத்தில் இவரது இசைக்கு சரியான வரவேற்பு இல்லை பின்பு 1999 வது வருடம் வெளியான
பூவெல்லாம் கேட்டுப்பார் என்கிற படத்திற்கு இசையமைத்து இருந்தார். அந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் பிறகு நந்தா , மௌனம் பேசியதே என அடுத்து அடுத்து ரசிகர்கள் விரும்பும்படியான பாடல்களை தந்து முன்னணி இசையமைப்பாளர் ஆனார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா சமூக வலைத்தளங்கிலும் அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு கருப்பு திராவிடன் என்றும் பெருமைமிகு தமிழன் என்று எழுதி உள்ளார் . யுவன் ஷங்கர் ராஜாவின் இந்த புகைப்படம் வேகமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக யுவனின் தந்தை இளையராஜா பிரதமர் மோடி அவர்களை Dr.அம்பேத்கருடன் தொடர்புபடுத்தி பேசி இருந்தார் . அதற்கு பலர் எதிர்ப்பும் சிலர் ஆதரவும் தெரிவித்தனர். இந்நிலையில் யுவனின் இந்த பதிவை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

Share.