யுவன் கொடுத்த அப்டேட் !

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3. இந்த படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , , திவ்ய தர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ‌”காபி வித் காதல் “என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது . பொதுவாக சுந்தர்.சி படம் கலகலப்பாக நகைச்சுவையுடன் இருக்கும் . ஆனால் இந்த படத்தின் தலைப்பே ‌”காபி வித் காதல் ” என்று சற்று வித்தியாசமாக உள்ளது . மேலும் இந்த கவுதம் வாசுதேவ் படங்களை போல ஒரு கிளாசிக் காதல் கதையாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது .


இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடல் பற்றின அறிவிப்பு வெளியாகி இருக்கிறது . யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது .

Share.