இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய சத்யபாமா பல்கலைக்கழகம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தின் பாடல்களே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அரவிந்தன்’. அதன் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். யுவன் ஷங்கர் ராஜா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கடைசியாக இவர் இசையமைத்து திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘விருமன்’.

இப்போது தமிழில் தனுஷின் ‘நானே வருவேன்’, விஷாலின் ‘லத்தி’, சந்தானத்தின் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சத்யபாமா பல்கலைக்கழகம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

Share.