பட போஸ்டரால் வெடித்த பிரச்சனை… பிரபல தயாரிப்பாளரை திட்டித் தீர்த்த யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி!

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தின் பாடல்களே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அரவிந்தன்’. அதன் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார்.

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கடைசியாக இவர் இசையமைத்து OTT தளத்தில் ரிலீஸான படம் ‘டிக்கிலோனா’. இப்போது தமிழில் ‘பிக் பாஸ் 4’ ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘தல’ அஜித்தின் ‘வலிமை’, சிலம்பரசனின் ‘மாநாடு’, தனுஷின் ‘நானே வருவேன்’, அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’, கார்த்தியின் ‘விருமன்’ ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார்.

இதில் ‘குருதி ஆட்டம்’ படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கி வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் ‘ரங்க ராட்டினம்’ என்ற பாடலை ரிலீஸ் செய்தனர். இப்பாடல் வெளியீட்டிற்கு முன்பு, அதன் ரிலீஸ் ப்ளான் குறித்து ஷேர் செய்யப்பட்ட போஸ்டரில் யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படமும், அவருடன் அப்பாடலை பாடிய அந்தோணி தாசன் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி ஆகிய இருவரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது.

அந்த போஸ்டரை பார்த்து டென்ஷனான யுவன் ஷங்கர் ராஜாவின் மூன்றாவது மனைவி ஸஃப்ரூன் நிஷார், ‘குருதி ஆட்டம்’ படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க? போஸ்டர்ல உள்ள இரண்டு பேர் யாரு? யுவனுக்கு பக்கத்துல அடையாளம் தெரியாத இரண்டு நபர்களின் புகைப்படத்தை போட்டு விளம்பரம் கொடுத்தீங்கன்னா, அதை நாங்க பார்த்துட்டு எப்படி பொறுத்துக்க முடியும். நீங்க ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பக்கத்தில் காமெடி நடிகர் கவுண்டமணி படத்தை போடுவீங்களா? இந்த விஷயம் அந்த மாதிரி தான் இருக்கு” என்று திட்டியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.