பாலா படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன தெரியுமா ?

  • April 12, 2022 / 05:05 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்ற கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகினி.

மேலும் இந்த படத்திலிருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா இந்த படத்தில் விசை படகு ஓட்டுனராக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இரண்டு பாடல்களை ஏற்கனவே தயார் செய்து விட்டதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். விரைவில் இந்த படத்தை பற்றின பல தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus