Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

  • February 28, 2024 / 12:11 PM IST

யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். இவர் இயக்கிய முதல் படமான ‘ஆன்டி இண்டியன்’ (Anti Indian) 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியதுடன் ‘ப்ளூ சட்டை’ மாறனே இசை அமைத்திருந்தார். இதில் ‘ப்ளூ சட்டை’ மாறனுடன் இணைந்து ராதாரவி, ‘பிக் பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, ‘ஆடுகளம்’ நரேன், முத்துராமன் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

இதனை ‘மூன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்திருந்தார். இந்த படத்துக்கு கதிரவன் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார், வீரமணி கணேஷன் கலை இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

தற்போது, இப்படம் பிரபல OTT தளமான ‘ஜியோ சினிமா’வில் வெளியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ‘ப்ளூ சட்டை’ மாறனே தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus