Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

  • February 28, 2024 / 02:09 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படமான ‘கேம் சேஞ்சர்’-ல் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடித்து வருகிறார். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம்.

இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இது தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’-யின் 50-வது படைப்பாம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

தமன் இசையமைத்து வரும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தை இந்த ஆண்டு (2024) டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus