‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
நேற்று (ஏப்ரல் 16-ஆம் தேதி) நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17-ஆம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார். இதுவரை விவேக் நடித்ததில் சிறந்த 10 காமெடி காட்சிகளின் லிஸ்ட் இதோ…
1.புதுப்புது அர்த்தங்கள் :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘புதுப்புது அர்த்தங்கள்’. இந்த படத்தில் ரகுமான், சித்தாரா, கீதா நடித்திருந்தனர், இதனை இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். விவேக்கின் இரண்டாவது படமான இதில் அவர் ‘விட்டல்’ என்ற ரோலில் வலம் வந்து ஜெயச்சித்ராவிடம் போனில் பேசும் காட்சிக்கு ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.
2.பாளையத்து அம்மன் :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பாளையத்து அம்மன்’. இந்த படத்தில் மீனா, ராம்கி, திவ்யா உன்னி நடித்திருந்தனர், இதனை இயக்குநர் இராம நாராயணன் இயக்கியிருந்தார். இதில் விவேக் ‘கல்யாணராமன்’ என்ற ரோலில் வலம் வந்து மயில்சாமியிடம் டிவி பேட்டியில் பேசும் காட்சிக்கு ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.
3.அள்ளித்தந்த வானம் :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அள்ளித்தந்த வானம்’. இந்த படத்தில் பிரபு தேவா, லைலா ஜோடியாக நடித்திருந்தனர், இதனை இயக்குநர் ஸ்ரீதர் பிரசாத் இயக்கியிருந்தார். இதில் விவேக் ‘தமிழ் கிறுக்கன்’ என்ற ரோலில் வலம் வந்து ஏ.சி.முரளி மோகனிடம் டிவி சேனல் ஆடிஷனில் பேசும் காட்சிக்கு ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.
4.மின்னலே :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மின்னலே’. இந்த படத்தில் மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடித்திருந்தனர், இதனை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் விவேக் ‘சொக்கலிங்கம்’ என்ற ரோலில் வலம் வந்து லாரி மீது மோதிவிட்டு பேசும் காட்சிக்கு ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.
5.ரன் :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ரன்’. இந்த படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்திருந்தனர், இதனை இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் விவேக் ‘மோகன்’ என்ற ரோலில் வலம் வந்து சென்னையில் ஹீரோவின் அட்ரஸை தொலைத்து விட்டு கஷ்டப்படும் அனைத்து காட்சிகளிலும் ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.
6.பாய்ஸ் :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பாய்ஸ்’. இந்த படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத் மற்றும் பலர் நடித்திருந்தனர், இதனை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் விவேக் ‘மங்களம்’ என்ற ரோலில் வலம் வந்து பாரில் மது அருந்திவிட்டு பேசும் காட்சிக்கு ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.
7.திருமலை :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘திருமலை’. இந்த படத்தில் விஜய், ஜோதிகா ஜோடியாக நடித்திருந்தனர், இதனை இயக்குநர் ரமணா இயக்கியிருந்தார். இதில் விவேக் ‘பழனி’ என்ற ரோலில் வலம் வந்து விஜய்யுடன் பைக்கில் வேலைக்கு இன்டர்வியூக்கு செல்லும் காட்சிக்கு ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.
8.சாமி :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சாமி’. இந்த படத்தில் விக்ரம், த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தனர், இதனை இயக்குநர் ஹரி இயக்கியிருந்தார். இதில் விவேக் ‘வெங்கடராமன்’ என்ற ரோலில் வலம் வந்து செல் முருகனை வைத்து பைக்கில் ஏழரை போட்டு காட்டும் காட்சிக்கு ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.
9.படிக்காதவன் :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘படிக்காதவன்’. இந்த படத்தில் தனுஷ், தமன்னா ஜோடியாக நடித்திருந்தனர், இதனை இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். இதில் விவேக் ‘அசால்ட் ஆறுமுகம்’ என்ற ரோலில் வலம் வந்து தனுஷை முதன்முதலாக சந்தித்து ரௌடி போல் கெத்து காட்டும் காட்சிக்கு ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.
10.வேலையில்லா பட்டதாரி :
நடிகர் விவேக்கின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தில் தனுஷ், அமலா பால் ஜோடியாக நடித்திருந்தனர், இதனை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். இதில் விவேக் ‘அழகு சுந்தரம்’ என்ற ரோலில் வலம் வந்து அனைத்து காட்சிகளிலும் ரசிகர்களிடம் செம அப்ளாஸ் வாங்கினார்.