முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 1-ஆம் தேதி அஜித்தின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதுவரை அஜித் நடித்ததில் சிறந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ…
1. விஸ்வாசம் :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித்தின் மகளாக வலம் வந்த அனிகா சுரேந்திரனுக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
2. மங்காத்தா :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மங்காத்தா’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித் நெகட்டிவ் ஷேடில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
3. பில்லா :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பில்லா’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். 1980-யில் ரஜினி நடித்து ஹிட்டான ‘பில்லா’ படத்தின் ரீமேக் வெர்ஷனான இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
4. அமர்க்களம் :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அமர்க்களம்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஷாலினி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சரண் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித்தும், ஷாலினியும் காதலித்து பின், பட ரிலீஸுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
5. முகவரி :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘முகவரி’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வி.இசட்.துரை இதனை இயக்கியிருந்தார். இதில் இசையமைப்பாளராக ஆசைப்படும் ‘ஸ்ரீதர்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் அஜித். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
6. வாலி :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வாலி’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
7. காதல் கோட்டை :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காதல் கோட்டை’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயாணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அகத்தியன் இதனை இயக்கியிருந்தார். ஹீரோ – ஹீரோயின் பார்க்காமலே காதலிக்கிறார்கள் என்ற ஐடியாவை வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
8. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்க, பாப்புலர் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராஜீவ் மேனன் இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித்துடன் இணைந்து மலையாள மெகா ஸ்டாரான மம்மூட்டியும் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
9.பூவெல்லாம் உன் வாசம் :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பூவெல்லாம் உன் வாசம்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எழில் இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் சிவக்குமார், நாகேஷ், சாயாஜி ஷிண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
10. சிட்டிசன் :
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சிட்டிசன்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வசுந்தரா தாஸ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சரவண சுப்பையா இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் நக்மா, மீனா, பாண்டியன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.