தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1-ஆம் தேதி) இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆனார்கள். இதுவரை ரஜினி நடித்ததில் சிறந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ…
1. எந்திரன் :
ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘எந்திரன்’. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இதனை இயக்கியிருந்தார். இதில் ரஜினி ‘சிட்டி’ ரோபோவாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
2. படையப்பா :
ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘படையப்பா’. தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இதனை இயக்க, ஹீரோயினாக சவுந்தர்யா நடித்திருந்தார். இதில் ஹீரோயின் கேரக்டரை காட்டிலும் வில்லி கேரக்டருக்கு தான் ஸ்கோப் அதிகம். அந்த வில்லி ரோலில் அசால்ட்டாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
3. பாட்ஷா :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘பாட்ஷா’. இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நக்மா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இதனை இயக்கியிருந்தார். இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ரகுவரன் மிரட்டியிருந்தார்.
4. தளபதி :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘தளபதி’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், ரஜினியுடன் இணைந்து மலையாள ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி ‘தேவராஜ்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
5. தில்லு முல்லு :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘தில்லு முல்லு’. காமெடி ஜானர் படமான இதனை ரஜினியின் குருநாதர் கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நாகேஷ், தேங்காய் ஸ்ரீநிவாசன், சௌகார் ஜானகி, மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
6. அண்ணாமலை :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘அண்ணாமலை’. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இதனை இயக்கியிருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்பாபு, ரேகா, ராதாரவி, ஜனகராஜ், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
7. முள்ளும் மலரும் :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘முள்ளும் மலரும்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் இயக்கியிருந்தார். இதில் ரஜினிகாந்த் ‘காளி’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
8. ஆறிலிருந்து அறுபது வரை :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ரஜினியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இதில் சோ, சங்கீதா மற்றும் பலர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.
9. ஸ்ரீ ராகவேந்திரர் :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் 100-வது படம் ‘ஸ்ரீ ராகவேந்திரர்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெறவில்லை, இருப்பினும் இதில் ரஜினிகாந்தின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தில் முக்கிய ரோல்களில் லக்ஷ்மி, விஷ்ணுவர்தன் நடித்திருந்தனர்.
10. பைரவி :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘பைரவி’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எம்.பாஸ்கர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தான் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்த முதல் படமாம். இதில் மிக முக்கிய ரோல்களில் ஸ்ரீப்ரியா, கீதா, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.