ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “மதராசபட்டினம்”. இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகளை தற்போது நிறைவு செய்துள்ளது. இந்த படத்தில்தான் எமிஜாக்சன் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதை கொண்டாடும் விதமாக எமிஜாக்சன் தனது குடும்பத்திற்கு விருந்து ஒன்றை தயார் செய்து, இந்த படத்தை தனது இல்லத்தில் திரையிட்டிருக்கிறார்.
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் நடிகை எமிஜாக்சன், நடிகர் ஆர்யா, நாசர், கொச்சின் ஹனீபா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
நிரவ் ஷா ஒளிப்பதிவில் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டங்களை அழகாக இந்த படத்தில் படம்பிடித்து காட்டியிருந்தார்கள். ஜிவி பிரகாஷ்குமார் இசையில் இந்த படத்தின் பாடல்கள் இனிமையாக ரசிகர்களை கவர்ந்திருந்தது.
இந்த படத்தின் 10 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக எமிஜாக்சன் இந்த விருந்தை ஏற்பாடு செய்து, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
எமி ஜாக்சன்” மதராசப் பட்டினத்தின் 10 வருட நிறைவு, குழந்தையாக ஒப்பற்ற இந்தியாவை பார்த்த முதல் முறை அது, ஆரம்ப காலகட்டத்திலேயே இப்படி ஒரு நல்ல படத்தில் நடித்து அதிலிருந்து தமிழ் திரையுலகில் பயணம் செய்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குனர் விஜய் அண்ணாவுக்கு என் பெரிய நன்றி” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.