விஜய்யின் தோல்வி படங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சுறா…!
சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்திருப்பது தளபதி விஜய்
இவர் பல வசூல் படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்துள்ளார். ஆனால் இவரின் நடிப்பில் வெளி வந்து படுதோல்வியடைந்த படம் என்றால் அது சுறா தான். அஜித் ரசிகர்கள் விஜய்யை கிண்டல் செய்ய வேண்டும் என்றாலே முதலில் கையில் எடுப்பது சுறாவை தான்.
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்யின் கடந்த பத்து வருட திரைப்பயணத்தில் மிக மிக குறைந்த வசூல் பெற்ற திரைப்படம் என்றால் அது சுறா தான் என கூறப்படுகிறது. ஆனாலும் சமீபத்தில் கேரளாவில் சுறாவை திரையிட்டு மீண்டும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓட வைத்தனர். இதற்கு முக்கிய காரணம் அஜித் ரசிகர்களை வாய் அடைப்பதற்கு தான். சரி ஏன், சுறா ட்ரோல் செய்யப்படுகிறது என்பதை பார்ப்போம்.
விஜய்க்கு கொஞ்சம் கூட எடுபடாத மீனவ கதாபாத்திரம், அதுவும் அவரின் உடைகள், உடல்மொழி எதுவும் மீனவ கதாபாத்திரத்திற்கு செட் ஆகவில்லை. முக்கியமாக வில்லனை எதிர்ப்பதற்கான காரணம், கப்பலை கடத்துவது என பல இடங்களில் லாஜிக் பிரச்சனை. தமன்னாவுடனான காதல், சண்டை காட்சிகள், முக்கியமாக சுறா என்ற படத்தின் பெயர் சுறா என்பதால் அறிமுக காட்சியில் விஜய் சுறாவை போல நீந்தி வரும் காட்சி. இவை எல்லாமே ட்ரோலுக்கான செம கன்டன்ட்ஸ்… ஆனால் படத்தை தூக்கி நிறுத்துவது வடிவேலுவின் காமெடி மட்டும்தான்.
இந்த படத்தின் தோல்வியை விஜய் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டதால் தான், அதன் பின் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். வெற்றிக்கு ஊந்து சக்தியாக இருப்பதே தோல்விதானே.