தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த திரை படம் “காதல் கொண்டேன்”. தனுஷ் திரையுலக பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
இந்த படம் ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் கதையை கொண்டிருந்தது. இது நடிகர் தனுஷிற்கு இரண்டாவது திரைப்படம். “துள்ளுவதோ இளமை” படத்தை தொடர்ந்து அவர் காதல் கொண்டேன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் தனுஷுடன் சோனியா அகர்வால், சுதீப் சராங்கி, நாகேஷ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தார்கள்.1996-ஆம் வருடம் வெளிவந்த ஹாலிவுட் படமான “ஃபியர்” படத்தை தழுவி இந்த படம் செல்வராகவனால் எழுதப்பட்டது.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படத்தின் பாடல்களை யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆர்.கே புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள். இந்த படம் அதன் மாறுபட்ட கதை களத்திற்காக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் தனுஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பின்னரே தனுஷ் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வர தொடங்கினார்.
இந்த படம் தெலுங்கு, கன்னடா, பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப்படத்தில் சிறுவயதில் துன்புறுத்தல்களுக்கு ஆளான வினோத் எனும் கதாபாத்திரத்தைப் சுற்றி கதைக்கரு அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த படம் வெளியாகி தற்போது 13 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதை தொடர்ந்து நடிகை சோனியா அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தப் படத்தில் தான் நடித்தது சிறந்த அனுபவம் என்றும், இயக்குனர் செல்வராகவன் என்னுடன் நடித்த தனுஷ் கே ராஜா மற்றும் இந்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.