தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “7ஜி ரெயின்போ காலனி”.
எதார்த்தமான வாழ்க்கைக் கதையில் காதலை கொண்டு மக்களை உருக்கமாக ரசிக்க வைத்த திரைப்படம் இது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தின் காட்சிகளை செல்வராகவன் இயக்கத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருந்தது அரவிந்த் கிருஷ்ணா.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கோலா பாஸ்கர் இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்திருந்தார். இந்த திரைப்படம் கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக “இந்தப் படத்தைப் போல இந்த காலகட்டத்தில் இன்னொரு படம் இயக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது” என்று இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை ஆமோதித்து, “இது போன்ற கதைகள் எப்பொழுது வந்தாலும் அது ஸ்பெஷல் தான்” என்று அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் பதிவு செய்துள்ளார்.
https://twitter.com/GitanjaliSelva/status/1316778261943218176?s=19