‘2.0’ டு ‘ஜெயிலர்’… ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கடைசி 5 படங்களின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • August 16, 2023 / 11:02 AM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவரின் கடைசி ஐந்து படங்களின் முதல் நாள் வசூல் விவரம் இதோ..

1.2.0 :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘2.0’. இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஐசரி கணேஷ், மயில்சாமி, சுதான்ஷு பாண்டே ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.95 கோடி வசூல் செய்தது.

2.பேட்ட :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பேட்ட’. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சசிக்குமார், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், த்ரிஷா, மாளவிகா மோகனன், சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.38 கோடி வசூல் செய்தது.

3.தர்பார் :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தர்பார்’. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நிவேதா தாமஸ், யோகி பாபு, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, ஸ்ரீமன், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.52 கோடி வசூல் செய்தது.

4.அண்ணாத்த :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, ஜெகபதி பாபு, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.50.85 கோடி வசூல் செய்தது.

5.ஜெயிலர் :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா மேனன், ‘ரித்து ராக்ஸ்’ ரித்விக், சுனில், தமன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும், கெஸ்ட் ரோல்களில் மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.91.20 கோடி வசூல் செய்தது.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus