சூரி – வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்!

  • September 22, 2023 / 06:10 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த படம் ‘விடுதலை’. இதில் பார்ட் 1 கடந்த மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, இயக்குநர் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இப்போது இதன் இரண்டாம் பாகத்துக்கான பேலன்ஸ் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷும், நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus