‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் ‘தனுஷ் 50’ படத்தில் இணைந்த 2 பிரபல நடிகர்கள்!
May 24, 2023 / 11:19 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், இயக்குநர் மாரி செல்வராஜ் படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள படம் தனுஷின் கேரியரில் 50-வது படமாம். தனுஷே இயக்கவுள்ள இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். தற்போது, இப்படத்தில் தனுஷுக்கு அண்ணனாக எஸ்.ஜே.சூர்யாவும், தம்பியாக சந்தீப் கிஷனும் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus