2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • January 10, 2023 / 12:44 AM IST

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். கடந்த ஆண்டு (2022) தமிழில் வெளிவந்த படங்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.பொன்னியின் செல்வன் (முதல் பாகம்) :

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’ (முதல் பாகம்). இதில் ‘ஜெயம்’ ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.492 கோடி வசூல் செய்தது.

2.விக்ரம் :

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) ஜூன் 3-ஆம் தேதி வெளியான படம் ‘விக்ரம்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.432 கோடி வசூல் செய்தது.

3.பீஸ்ட் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.237 கோடி வசூல் செய்தது.

4.வலிமை :

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.152 கோடி வசூல் செய்தது.

5.டான் :

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) மே 13-ஆம் தேதி வெளியான படம் ‘டான்’. இந்த படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.122.5 கோடி வசூல் செய்தது.

6.திருச்சிற்றம்பலம் :

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தை இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.101 கோடி வசூல் செய்தது.

7.சர்தார் :

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 21-ஆம் தேதி வெளியான படம் ‘சர்தார்’. இந்த படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.91 கோடி வசூல் செய்தது.

8.லவ் டுடே :

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து கடந்த ஆண்டு (2022) நவம்பர் 4-ஆம் தேதி வெளியான படம் ‘லவ் டுடே’. இதில் ஹீரோயினாக இவானா நடித்திருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.88 கோடி வசூல் செய்தது.

9.கோப்ரா :

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான படம் ‘கோப்ரா’. இந்த படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.68.3 கோடி வசூல் செய்தது.

10.எதற்கும் துணிந்தவன் :

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு (2022) மார்ச் 10-ஆம் தேதி வெளியான படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.62 கோடி வசூல் செய்தது.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus