2022-யில் வெளியாகி முதல் 12 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

  • April 27, 2022 / 04:39 PM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை இந்த ஆண்டு (2022) வெளிவந்த படங்களில் முதல் 12 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.RRR :

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி வெளியான படம் ‘RRR’. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் – ராம் சரண் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 12 நாட்களில் உலக அளவில் ரூ.944 கோடி வசூல் செய்தது.

2.கே.ஜி.எஃப் 2 :

யாஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான படம் ‘கே.ஜி.எஃப் 2’. இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 12 நாட்களில் உலக அளவில் ரூ.912.30 கோடி வசூல் செய்தது.

3.பீஸ்ட் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 12 நாட்களில் உலக அளவில் ரூ.218.15 கோடி வசூல் செய்தது.

4.வலிமை :

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 12 நாட்களில் உலக அளவில் ரூ.208.57 கோடி வசூல் செய்தது.

5.ராதே ஷ்யாம் :

பிரபாஸ் நடிப்பில் இந்த ஆண்டு (2022) மார்ச் 11-ஆம் தேதி வெளியான படம் ‘ராதே ஷ்யாம்’. இந்த படத்தை இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 12 நாட்களில் உலக அளவில் ரூ.206 கோடி வசூல் செய்தது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus