தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். கடந்த ஆண்டு (2023) தமிழில் வெளிவந்த படங்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…
1.லியோ :
‘தளபதி’ விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான படம் ‘லியோ’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி, ‘பிக் பாஸ்’ ஜனனி, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.620 கோடி வசூல் செய்தது.
2.ஜெயிலர் :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா மேனன், ‘ரித்து ராக்ஸ்’ ரித்விக், சுனில், தமன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும், கெஸ்ட் ரோல்களில் மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.608 கோடி வசூல் செய்தது.
3.பொன்னியின் செல்வன் 2 :
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.340.5 கோடி வசூல் செய்தது.
4.வாரிசு :
‘தளபதி’ விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி வெளியான படம் ‘வாரிசு’. இந்த படத்தை இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.304 கோடி வசூல் செய்தது.
5.துணிவு :
‘தல’ அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி வெளியான படம் ‘துணிவு’. இந்த படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.194.5 கோடி வசூல் செய்தது.
6.வாத்தி :
தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான படம் ‘வாத்தி’. இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி, இளவரசு, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.105 கோடி வசூல் செய்தது.
7.மார்க் ஆண்டனி :
விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, செல்வராகவன், சுனில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.101 கோடி வசூல் செய்தது.
8.மாவீரன் :
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) ஜூலை 14-ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இந்த படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், படத்தில் வரும் ஒரு ஸ்பெஷல் வாய்ஸ் ஓவருக்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.77 கோடி வசூல் செய்தது.
9.மாமன்னன் :
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) ஜூன் 29-ஆம் தேதி வெளியான படம் ‘மாமன்னன்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், ரவீனா ரவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.72 கோடி வசூல் செய்தது.
10.ஜிகர்தண்டா டபுள்X :
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு (2023) நவம்பர் 10-ஆம் தேதி வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள்X’. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ, இளவரசு, சத்யன், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.67.25 கோடி வசூல் செய்தது.