தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை இந்த ஆண்டு (2023) தமிழில் வெளிவந்த படங்களில் முதல் 5 நாட்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…
1.வாரிசு :
‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜனவரி 14-ஆம் தேதி வெளியான படம் ‘வாரிசு’. இந்த படத்தை இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.163.30 கோடி வசூல் செய்தது.
2.துணிவு :
‘தல’ அஜித் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி வெளியான படம் ‘துணிவு’. இந்த படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.117.95 கோடி வசூல் செய்தது.
3.வாத்தி :
தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2023) பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான படம் ‘வாத்தி’. இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி, இளவரசு, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.61.90 கோடி வசூல் செய்தது.
4.அகிலன் :
‘ஜெயம்’ ரவி நடிப்பில் இந்த ஆண்டு (2023) மார்ச் 10-ஆம் தேதி வெளியான படம் ‘அகிலன்’. இந்த படத்தை இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ப்ரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதனன் ராவ், சிராக் ஜானி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.11.55 கோடி வசூல் செய்தது.
5.டாடா :
கவின் நடிப்பில் இந்த ஆண்டு (2023) பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியான படம் ‘டாடா’. இந்த படத்தை இயக்குநர் கணேஷ்.கே.பாபு இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் அபர்ணா தாஸ், கே.பாக்யராஜ், VTV கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.7.30 கோடி வசூல் செய்தது.