தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை இந்த ஆண்டு (2023) தமிழில் வெளிவந்த படங்களில் முதல் 5 நாட்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…
1.பொன்னியின் செல்வன் – 2 :
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இந்த ஆண்டு (2023) ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.235 கோடி வசூல் செய்தது.
2.வாரிசு :
‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி வெளியான படம் ‘வாரிசு’. இந்த படத்தை இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.163.30 கோடி வசூல் செய்தது.
3.துணிவு :
‘தல’ அஜித் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி வெளியான படம் ‘துணிவு’. இந்த படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.117.95 கோடி வசூல் செய்தது.
4.வாத்தி :
தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2023) பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான படம் ‘வாத்தி’. இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி, இளவரசு, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.61.90 கோடி வசூல் செய்தது.
5.மாவீரன் :
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜூலை 14-ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இந்த படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், படத்தில் வரும் ஒரு ஸ்பெஷல் வாய்ஸ் ஓவருக்கு முன்னணி நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் உலக அளவில் ரூ.54.81 கோடி வசூல் செய்தது.