தமிழ் சினிமாவில் 64 படங்களில் வெற்றிகரமாக நடித்து முடித்த விஜய் தமிழ் ரசிகர்களிடையே ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
தளபதி விஜய் 1998ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியான” பிரியமுடன்” திரைப்படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருப்பார். தேவா இசையமைப்பில் இந்த படம் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியானது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கௌசல்யா நடித்திருப்பார். மணிவண்ணன், நாசர் ,ஜெய் கணேஷ் எஸ். ஏ .சந்திரசேகரன் மதன்பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை தெலுங்கு(2000) , கன்னடா(2002), இந்தி (2013)மட்டுமின்றி சிங்கள(2019) மொழியிலும் ரீமேக் செய்துள்ளார்கள்.
தமிழில் இந்த படத்தை எஸ்.டி .விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்திருப்பார். தேவா இசையில் வெளிவந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்தது.
1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் 12 ஆண்டு இன்றோடு நிறைவடைகிறது.
தற்போது இந்த படத்தில் நடித்த நடிகரான தளபதி விஜய்யின், “மாஸ்டர்” திரைப்படம் வெளிவருவதற்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை அடுத்து தளபதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி ‘தளபதி65’ படத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற செய்தியும் தற்போது வந்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.