‘பிக் பாஸ் 4’ : “எதுக்கு இந்த கேமை உட்கார்ந்து விளையாடணும்?”… கடுப்பான 4 போட்டியாளர்கள்!

  • December 7, 2020 / 03:38 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டனர்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஆரி, அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், பாலாஜி முருகதாஸ் நான்கு பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆரி “ஒருத்தர் ஒருத்தரை காப்பாத்தி விளையாடிக்குறாங்க, அவங்களாம் உள்ள இருக்காங்க. individual-ஆ விளையாடுறவங்க எல்லாரும் வெளியே போயிட்டே இருக்காங்க” என்று சொல்கிறார்.

அதற்கு அனிதா “என்னது அப்ப இந்த கேம். எதுக்கு விளையாடணும் உட்கார்ந்து?” என்று சொல்கிறார். பின், ஆரி “individual players வந்து வெளியே போயிட்டே இருந்தாங்கன்னா, அந்த ஒரு group strong ஆயிட்டே உள்ள இருந்துச்சுன்னா அப்புறம் அவங்களுக்கு போடுறவங்க எல்லாம் போடுவாங்க. இப்போ சனம் வெளியே போயிட்டாங்க, நான் அமைதியா உட்கார்ந்திருக்கேன். நாளைக்கு எனக்கும் அதான் நிலைமை, உனக்கும் அதான் நிலைமை” என்று சொல்கிறார். அதன் பிறகு பாலாஜி “நான் இதேதான் அப்போ சொன்னேன். ஹவுஸ்ல பெரிய imbalance வரப்போகுது அப்படின்னு” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus