மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி’… அஜித்துக்கு ஜோடியாக நடிக்க 5 நடிகைகளின் பெயர்கள் பரிசீலனை!

  • May 12, 2023 / 03:11 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங்கை வருகிற மே 22-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கவுள்ளனர். தற்போது, இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சன், கரீனா கபூர், கத்ரீனா கைஃப், கங்கனா ரனாவத், த்ரிஷா ஆகிய 5 நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus