‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும், ஜனவரி 14-ஆம் தேதி சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படமும் திரையரங்குகளில் வெளியானது. இவ்விரண்டு படங்களுக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பினால், அடுத்தடுத்து சில தமிழ் படங்கள் (கபடதாரி, களத்தில் சந்திப்போம், ட்ரிப்) ரிலீஸானது. இப்போது, வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ஐந்து புதிய தமிழ் படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போடப்பட்டுள்ளது. அப்படங்களின் லிஸ்ட் இதோ…
1.பாரிஸ் ஜெயராஜ் :
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக அனைகா சொட்டி நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோலில் சஸ்டிகா ராஜேந்திரன் நடித்துள்ளாராம். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
2.ஏலே :
இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ‘ஏலே’ படத்தில் கதையின் மிக முக்கிய ரோல்களில் இயக்குநர் சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி ஆகியோர் நடித்துள்ளனர். கபேர் வாசுகி – அருள்தேவ் இணைந்து இசையமைத்துள்ள இதற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா – ஹலிதா ஷமீம் சேர்ந்து படத்தொகுப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் தயாரித்துள்ளது. சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
3.குட்டி ஸ்டோரி :
‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட்டி ஸ்டோரி’. ஆந்தாலஜி படமான இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர். இதில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள குறும்படத்தில் வருண் – ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலும், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள குறும்படத்தில் அமிதாஷ் பிரதான் – மேகா ஆகாஷும், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் அவரே ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக அமலா பாலும், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள குறும்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – அதிதி பாலனும் நடித்துள்ளனர். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
4.C/O காதல் :
தெலுங்கு திரையுலகில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘C/O கஞ்சரபாலம்’. இந்த படத்தை இயக்குநர் வெங்கடேஷ் மகா இயக்கியிருந்தார். இதில் சுப்பா ராவ், ராதா பெஸ்ஸி, கேசவா கர்ரி, நித்யஸ்ரீ கோரு, கார்த்திக் ரத்னம், பிரநீதா பட்நாயக், மோகன் பகத், பிரவீனா பருச்சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. இதன் தமிழ் ரீமேக் தான் ‘C/O காதல்’. இந்த படத்தை இயக்குநர் ஹேமம்பார் ஜஸ்டி இயக்கியுள்ளார். இதில் தீபன், வெற்றி, மும்தாஜ் சோர்கர், ஆர்யா, கார்த்திக் ரத்னம், சோனியா கிரி, நிஷேஷ், ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
5.நானும் சிங்கிள் தான் :
‘அட்டகத்தி’ தினேஷ், தீப்தி ஜோடியாக நடித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தை ஆர்.கோபி இயக்க, ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார். இதில் செல்வா, விகாஷ், கதிர், ரமா, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.