தளபதி 67 படத்தில் நடிக்கும் 7 முன்னணி நடிகர்களின் பட்டியல் !

  • January 23, 2023 / 09:01 AM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில தினங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இந்நிலையில் தளபதி 67 படத்தில் இணைந்து உள்ள 7 பிரபலம் பற்றி காண்போம்

1. திரிஷா – நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் . இவர் விஜய்யுடன் இணைந்து கில்லி , குருவி ,ஆதி ஆகிய படங்களில் நடித்துள்ளார் . நீண்ட இடைவேளைக்கு பிறகு திரிஷா – மற்றும் விஜய் இணைந்து நடிக்க உள்ளனர் .

2. ப்ரியா ஆனந்த் – வாமனன் படம் மூலம் பிரபலமான நடிகை ப்ரியா ஆனந்த் . அதன் பின் எதிர்நீச்சல் , வணக்கம் சென்னை , உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார் . தற்போது . ப்ரியா ஆனந்த் இந்த படத்தில் கமிட் ஆகி உள்ளார் .

3.சஞ்சய் தத்: – பாலிவுட் சினிமாவை கலக்கி வந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பி உள்ளார் . கே.ஜி.எஃப் 2 படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது இவர் விஜய் 67 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் .

4. மிஷ்கின் – பல தரமான படைப்புகளை தந்த இயக்குநர் மிஷ்கின் விஜய் 67 படத்தில் நடித்து வருகிறார் . திறமையாக நடிக்ககூடிய மிஷ்கின் நடிகர் விஜய்யுடன் மோதும் காட்சிகளை காண ஆர்வமாக உள்ளனர் .

5. அர்ஜுன்- தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கதை நாயகனாக வலம் வந்தவர் அர்ஜுன் .இவர் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் . முன்னதாக கடல் படத்திலும் வில்லன் பாத்திரத்தில் நடித்து இருந்தார் . தற்போது இவர் விஜய் 67 படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது .

6. கௌதம் வாசுதேவ் மேனன்: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக நெருக்கமான இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் . பல சூப்பர் ஹிட் காதல் படங்களை இவர் தந்து உள்ளார் . தற்போது நடிப்பிலும் அசத்தி வருகிறார் . அந்த வகையில் தற்போது இவர் விஜய் 67 படத்தில் நடிக்க உள்ளார் .

7 . மன்சூர் அலிகான்: 90களின் ஆரம்பத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து வந்தார் மன்சூர் அலிகான். இயக்குநர் லோகேஷ் பல முறை கூறி உள்ளார் மன்சூர் அலிகானுக்கு நான் ரசிகர் என்று . மேலும் கைதி படத்தில் முதலில் மன்சூர் அலிகான் நடிக்கவிருந்தார் என்றும் கூறினார். எப்போது இணையும் மன்சூர் அலிகான் மற்றும் லோகேஷ் கூட்டணி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் 67 படத்தில் இது உறுதியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus