‘8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்’ படங்களின் இயக்குநர் ஸ்ரீ கணேஷின் திருமண புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரீ கணேஷ். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘8 தோட்டாக்கள்’. இதில் ஹீரோவாக வெற்றி நடிக்க, முக்கிய ரோல்களில் எம்.எஸ்.பாஸ்கர், நாசர், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தனர்.

‘8 தோட்டாக்கள்’ ஹிட்டிற்கு பிறகு ஸ்ரீ கணேஷ் இயக்கி சமீபத்தில் வெளியான படம் ‘குருதி ஆட்டம்’. இதில் ஹீரோவாக அதர்வா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.

ஸ்ரீ கணேஷ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் ஸ்ரீ கணேஷ் சுஹாசினி என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.