‘9 Years Of Thuppakki’… முதலில் வைக்கப்பட்ட டைட்டில்? காஜலுக்கு முன்பு ஒப்பந்தமான ஹீரோயின் யார் தெரியுமா?

  • November 13, 2021 / 08:29 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இப்போது விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’, இயக்குநர் வம்சி படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘துப்பாக்கி’. 2012-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார்.

இதில் ‘ஜெகதீஷ்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இன்றோடு (நவம்பர் 13-ஆம் தேதி) இப்படம் ரிலீஸாகி 9 வருடங்கள் ஆகி விட்டது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் ‘#9YearsOfThuppakki’ என்ற ஹேஸ்டேக்கை போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ…

1.இந்த படம் உலக அளவில் ரூ.130 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.72 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்தது.

 

2.முதலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது. அதன் பிறகு தான் கலைப்புலி.எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்க முன் வந்து அதிக பொருட்செலவில் தயாரித்தார்.

3.இந்த படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் ‘மாலை நேரத்து மழைத்துளி’.

4.வழக்கமாக தனது படங்களில் எடிட்டர் ஆண்டனியுடன் பணியாற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்த படத்தில் தான் முதல் முறையாக எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துடன் இணைந்து பணியாற்றினார்.

 

5.’நண்பன்’ படத்துக்கு பிறகு விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் அமைந்த இரண்டாவது படம் தான் ‘துப்பாக்கி’.

6.இந்த படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் ஏஞ்சலா ஜான்சன். அவரையும் விஜய்யையும் வைத்து சென்னையில் போட்டோஷூட்டும் நடத்தப்பட்டது. பின், சில காரணங்களால் அவர் விலகியதும் காஜல் அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தமானார்.

7.இந்த படத்தில் இடம்பெற்ற ‘கூகுள் கூகுள்’ பாடலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர்.

8.’கூகுள் கூகுள்’ பாடலை 10 நாட்களில் பேங்காக்கில் உள்ள ஒரு பப்பில் படமாக்கினார்களாம்.

9.இந்த படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே’ என்ற பாடலின் ஷூட்டிங்கை சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்த நேரத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனால் கலந்து கொள்ள முடியாமல் போக, அவருக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் நட்டி அப்பாடல் காட்சியை படமாக்கினார்.

10.இந்த படத்தின் பட்ஜெட் ரூ.70 கோடியாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus